தாய்லாந்து நாட்டில் ரூ.594 கோடி மோசடி செய்த புத்த சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மோசடி சாமியார்கள் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். தாய்லாந்து நாட்டில் புத்த சாமியார் ஒருவர் அளவுக்கு அதிகமாக பண மோசடி செய்து சிக்கி இருக்கிறார்.
தாய்லாந்தின் தம்மஹாயா என்பது புகழ் பெற்ற புத்த மதம் ஆகும். இங்கு சாமியாராக இருந்தவர் பராதம்மஹாயா இவர், மடத்தின் சொத்துக்களை முறைகேடு செய்ததுடன் ஏராளமான திருட்டு பொருட்களையும் வாங்கி விற்றுள்ளார். இதன் மூலம் 594 கோடி ரூபாய் சொத்து சேர்த்து இருக்கிறார். இவருக்கு உடந்தையாக 3 புத்த சாமியார்கள் இருந்துள்ளனர். ஜெயிலில் இருக்கும் அதிகாரி ஒருவரும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு வெளியானதையடுத்து சாமியார் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர்.