Loading...
இயக்குனர் விஜய்யுடனான மண முறிவுக்கு பின்னர் அமலாபால் பல படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார். அதன்படி, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் நடித்து வரும் அமலாபால், சௌந்தர்யா ரஜினி இயக்கும் ‘விஐபி-2’ மற்றும் சுசிகணேசன் இயக்கத்தில் ‘திருட்டு பயலே-2’ ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் நாயகியாக அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். விஷ்ணு விஷால் அடுத்ததாக ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர் ராம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் கதாநாயகியாக அமலாபால் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.
Loading...
சைக்கோ திரில்லர் படமாக உருவாக இருக்கும் இதில் விஷ்ணு விஷால் போலீசாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...