யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியில் இளைஞர் ஒருவரை அரிவாளால் வெட்டியதாகவும் , சாவகச்சேரி மருத்துவமனையின் ஊழியர்களை அச்சுறுத்தியதாகவும் முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சாவகச்சேரி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விருந்து உபசார நிகழ்வின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்தேக நபர்கள் அரிவாள் ஒன்றினால் தங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒருவரை வெட்டியாதாக கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபரை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த பொழுதும் சந்தேக நபர்கள் இருவரும் பலவந்தமாக நோயாளர் அறைக்குள் நுழைய முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நுழைய முற்பட்ட குறித்த சந்தேக நபர்களை தடுத்து நிறுத்திய வைத்தியசாலையின் தாதி மற்றும் ஏனைய ஊழியர்களை இவர்கள் அச்சுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்பின்னர் காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.