சிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் காயமடைந்துள்ளனர் என அப்பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாரவூர்தி ஒன்றுடன் கார் ஒன்றும் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற வேளையில் பாரவூர்தியில் 8 பேர் இருந்துள்ளதோடு காரில் 3 பேர் பயணம் செய்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் 65 வயதுடைய குருநாகல் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சமப்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.