Loading...
கிரீஸ் நாட்டில் அகதிகள் முகாம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெஸ்வோஸ் தீவில் உள்ள தற்காலிக அகதிகள் முகாமிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 6 வயது குழந்தை, 66 வயது பெண் என இருவர் தீயில் கருகி பலியாகியுள்ளனர். மேலும், இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Loading...
சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து அதிகாரிகள் கூறியதாவது, கிடைத்துள்ள ஆதாரங்கள் படி வெடிவிபத்தில் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தை தொடர்ந்து அகதிகளுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. லெஸ்வோஸ் தீவில் 6,000ற்கும் மேற்பட்ட அகதிகள் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Loading...