இலங்கையின் கிழக்கு கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள நோர்வே மற்றும் பிரான்சின் இரண்டு எரிசக்தி நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் அரசாங்கம் இன்று கைச்சாத்திட உள்ளதாத தெரிவிக்கபப்டுகின்றது .
அரசாங்கத்திற்கும் நோர்வேயின் ஈக்வினர் மற்றும் பிரான்ஸ் நிறுவனங்களுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என பெட்ரோலிய வள மேம்பாட்டு கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர் வஜிர தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஆய்வுகள் இரண்டு வருடங்களிற்கு இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே கிழக்கு கடற்கரையில் 50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், அப்போதைய ஆய்வில் எண்ணெய், எரிசக்தி வளங்கள் உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் புதிய ஒப்பந்தத்தின்படி ஈக்வினோர் நிறுவனம், ஆய்வில் 30 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பெல் ஜியோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்துடன் மன்னார் வளைகுடாவில் ஆய்வை மேற்கொள்ள ஏற்பகவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.