நட்சத்திர ஹொட்டலில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக நடிகை நிலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழில் அன்பே ஆருயிரே, மருதமலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை நிலா. மீரா சோப்ரா என்ற பெயரை சினிமாவிற்காக நிலா என மாற்றியிருந்தார்.
இவர் சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்குக் கொடுக்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்துள்ளது.
இதுகுறித்து மீரா சோப்ரா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
‘நான் அகமதாபாத்தில் உள்ள டபுள் ட்ரீ ஹில்டன் என்ற 5 நட்சத்திர ஹொட்டலில் தங்கியுள்ளேன். அங்கு ரூம் சேர்வீஸ் மூலம் உணவு வாங்கினேன். ஆனால் அந்த உணவில் புழுக்கள் உள்ளது. இதைச் சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. பெரிய நட்சத்திர ஹொட்டல் என்பதால் அதிக வாடகை கொடுத்து இங்கு தங்குகிறோம்.
ஆனால், அவர்கள் புழுக்களைக் கொண்ட உணவைக் கொடுக்கிறார்கள். எனக்குக் கடந்த ஒருவாரமாக உடல்நிலை சரியில்லை. அதற்கான காரணம் தற்போது தெரிந்துவிட்டது. இதை உங்களுக்கும் தெரியப்படுத்த விரும்பினேன்’ என்று பதிவிட்டுள்ளார்.