மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டகார்கள் மீது தடியடி கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதால் சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் உள்ள கள்ளியம் காட்டில் உள்ள இந்து மயானத்தில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடித்த தற்கொலை குண்டு தாரியின் தலை மை புதைத்ததால் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
blob:https://www.facebook.com/e8a7f9a0-e95e-4d46-a462-01652abac7bb
இந்நிலையில் தற்கொலை குண்டுதாக்குதலில் தனது மகளை பறிகொடுத்த தந்தை தீக்குளிக்க போவதாக கூறி மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்றிரவு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாநகர மேயர் இணைந்து இரகசியமாக மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடித்த தற்கொலை குண்டு தாரியின் தலை புதைத்ததாக ஆர்ப்பாட்டகார்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கள்ளிக்காட்டு இந்து மயான வீதியில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.