காத்தான்குடியை சேர்ந்த மனித வெடிகுண்டின் உடல்பாகத்தை மட்டக்களப்பு இந்து மயானத்தில் புதைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீயோன் தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போதும் மட்டக்களப்பு – திருகோணமலை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 1 மணிநேரமாக பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு பாதுகாப்பு தரப்பினர் எச்சரித்தபடியிருக்கிறார்கள். எனினும், வீதி மறியலை கைவிட போராட்டக்காரர்கள் மறுத்து வருகிறார்கள். புதைக்கப்பட்ட உடலை அப்புறப்படுத்தும் உத்தரவாதம் தமக்கு தரப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.