இன்றைய காலத்தில் வீட்டில் இருப்பவர்களை விட அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தான் அதிகமான மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் மற்றும் பொருளாதார பிரச்சனைகள், குடும்பச் சுமைகளே.
மன அழுத்தத்தினால் ஏற்படும் இது மாதிரியான பிரச்சனைகளை எதிர் கொள்ள, நமது உடம்பிற்கு போதுமான ஓய்வை கொடுக்க வேண்டும்.
மேலும் நமது உடம்பின் ஆற்றலை மேம்படுத்த, காலையில் எழுந்ததும், மூச்சுப் பயிற்சிகள், தியானம், யோகா போன்ற பயிற்சிகளையும் செய்து வர வேண்டும்.
மனஅழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்யும் சுவாசப் பயிற்சி முறைகள்
Belly Breathing
ஒரு கையை வயிற்றிலும் மற்றொரு கையை மார்பகத்திலும் வைத்து, கொண்டு மூச்சை நன்றாக இழுத்து வயிற்றின் மீது உள்ள கையை எடுத்து விட்டு மூச்சை விட வேண்டும். இதே போல் 3-10 முறை செய்ய வேண்டும்.
Roll Breathing
ரோல் சுவாசப் பயிற்சி என்பது நமது நுரையீரலின் வலிமையை அதிகரிக்கச் செய்வதற்காக உள்ள பயிற்சியாகும். இந்த பயிற்சியை அமர்ந்து கொண்டு செய்வது மிகவும் எளிமையானது.
இடது கையை வயிற்றிலும், வலது கையை மார்பகத்திலும் வைத்துக் கொண்டு மூக்கு வழியாக மூச்சை இழுத்து, வாய் வழியாக வெளியில் விட வேண்டும் இப்படி செய்யும் போது, மார்பகத்தில் வைத்திருக்கும் கையை மட்டும் எடுக்கவே கூடாது.
இதே போல் 8 முறைகள், 5 நிமிடம் வரை தொடர்ந்து செய்து வர வேண்டும். இந்தப் பயிற்சியானது மனஅழுத்தத்தைக் குறைத்து மனதிற்கு அமைதியைத் தருகின்றது.
மேலும் இது மாதிரியான மூச்சுப் பயிற்சியை காலையில் எழுந்ததும் செய்வதால், நமக்கு அதிகமான புத்துணர்ச்சிகள் கிடைப்பதுடன், நமது உடலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது.