எகிப்து நாட்டில் மண்ணில் மூடப்பட்டிருந்த 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான நகரம் ஒன்றை அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பண்டைய நகரில் மயானம், வீடுகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மண்ணில் செய்யப்பட்ட பானைகள் பல்வேறு உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நையில் நதிக்கு மேற்கில் அபாய்டோஸ் நகரில் சோதி என்ற பிரதேசத்தில் இந்த நகரம் காணப்படுகிறது.
உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்த பிரபுக்கள் இந்த மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாக தொல் பொருள் ஆய்வில் ஈடுபட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பண்டைய கால எகிப்து கலாச்சாரத்தில் மயான கல்லறைகளை நிர்மாணிக்கும் வாஸ்து விஞ்ஞானிகள் வாழ்ந்த இடமாக இந்த பழமையான நகரத்தை அடையாளப்படுத்த முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டமையானது, முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவியில் அகற்றப்பட்ட பின்னர் ஸ்தம்பித்து போன எகிப்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் என கூறப்படுகிறது.