தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட தி.மு.க. நிர்வாகியிடம் கோடிக்கணக்கான பணம் உள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் மனைவியிடம் அவர் கடைசியாக பேசிய விடயம் குறித்தும் தெரியவந்துள்ளது.
நாமக்கல்லை சேர்ந்தவர் டாக்டர் ஆனந்த் (50). மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளரான இவர், ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் உறவினர் ஆவார்.
இவரது மனைவி தமிழ்செல்வி (45), தனியார் கல்லூரி விரிவுரையாளர். மகள் அபர்ணா (17).
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆனந்த், நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் விவரம் வருமாறு,
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தோட்டத்திற்கு சென்ற ஆனந்த், கோவையில் இருந்த தனது மனைவி தமிழ்செல்விக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
அப்போது தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்செல்வி, தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். நான் வீட்டிற்கு வந்ததும் பேசிக்கொள்ளலாம் என சமாதானம் செய்தார்.
பின்னர் தமிழ்செல்வி, உறவினரான பிரவீன்ராஜாவிற்கு (26) போன் செய்து, உடனடியாக ஆனந்தை பார்த்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பிரவீன்ராஜா, ஆனந்திடம் வீட்டிற்கு செல்லலாம் என அழைத்தார்.
இதையடுத்து காரை எடுத்து வருவதாக சென்ற பிரவீன்ராஜா, தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் தனது தாடையில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன்ராஜா அங்கு சென்று பார்த்தபோது ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடனடியாக பிரவீன்ராஜா பொலிசாருக்க்கும் ஆனந்தின் மனைவி தமிழ்செல்விக்கும் தகவல் தெரிவித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஆனந்தின் மனைவி தமிழ்செல்வி, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எங்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கமானது தான்.
எனது கணவர் குடும்ப தகராறு ஏற்படும் சமயங்களில் என்னிடம் பேசாவிட்டாலும், நான் அவரிடம் பேசி சமாதானம் செய்வேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது கணவர் நண்பர்களுடன் பொள்ளாச்சிக்கு சுற்றுலா சென்று விட்டு வந்தபோது மீண்டும் எங்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக இருவரும் பேசிக்கொள்வது இல்லை.
இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என அவர் கூறினார்.
இதனிடையில் ஆனந்துக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதும், இதோடு பெட்ரோல் பங்க் மற்றும் விவசாய நிலங்களும் ஏராளமாக உள்ளது தெரியவந்துள்ளது.
குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் இதற்கு வேறு காரணம் உள்ளதா என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.