நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்த பாகிஸ்தான் அகதி ஒருவர் தீக்குளித்த நிலையில், அவுஸ்திரேலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
36 வயதுதான குறித்த பாகிஸ்தான் அகதி உயிருக்கு ஆபத்தான சூழலில் நவுருத்தீவிலிருந்து விமானம் வழியாக பிரிஸ்பேனுக்கு (அவுஸ்திரேலியா) அழைத்து செல்லபட்டார் என அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல் தெரிவித்துள்ளார்.
நவுருவில் உள்ள 300 க்கும் மேற்பட்ட அகதிகள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார் ஐன் ரிண்டோல்.
கடந்த 2016ம் ஆண்டு, தீக்குளித்த ஈரானிய அகதி முறையான சிகிச்சையின்றி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் பாகிஸ்தான் அகதிக்கு அவுஸ்திரேலியாவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் அங்குள்ள இலங்கை உள்ளிட்ட சில அகதிகள் கடந்த காலங்களில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவங்களும் பதிவாகி உள்ளன.
கடந்த 2013 முதல், கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி வருகிறது.
இதன் காரணமாக சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்.