இலங்கை சர்வதேச சந்தையில் சாதிப்பதற்கு முன்னர், ஆசிய சந்தையில் தனது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசிய பொருளாதாரத்தில் ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் ஜாம்பவான்களாக திகழ்கின்றன. எனவே மேற்குலக நாடுகள் மீது கவனம் செலுத்துவதற்கு முன்னர் ஆசிய பொருளாதார ஜாம்பவான்களுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தி போட்டித் தன்மையில் வெல்ல வேண்டும்.
இலங்கையின் வெளிநாட்டு கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற தீர்மானித்தமை, அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானமை போன்றவை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் நாடு இழந்த சர்வதேச வாய்ப்புக்களை மீள பெற வேண்டிய தேவையுள்ளது. எவ்வாறேனும் உலக பொருளாதார வல்லரசுகள், இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றமென பிரதமர் தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகள் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் உரையாற்றினார்.