தேவையான பொருட்கள் :
நாட்டு முட்டை – 3
கீரை (எதாவது)- ஒரு கப்
மிளகுதூள் – அரை டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை :
பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கீரையை எடுத்து நன்றாக சுத்தம் செய்து அதையும் பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சிறிது உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து நன்றாக அடித்து கலக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பச்சைமிளகாயை போட்டு வதக்கி கீரையை சேர்த்து வதக்கவும்.
கீரை லேசாக வதங்கியதும் முட்டை கலவையை அதனுடன் சேர்த்து, கலந்து கொள்ளவும். பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து முட்டை கலவையை தோசை போல ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
அதனை நேர் நேராக அறுத்து சுரப்பி வைத்து கொத்தமல்லியை தூவினால் சூப்பரான கீரை ஆம்லெட் ரெடி.