பல இளைஞர்களுக்கு இன்று காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல், குழம்பி போய் இருப்பார்கள். அப்படி காதலை வெளிப்படுத்திய பின்னர் அவர்கள் ஏற்று கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. நம்மை அவமானப்படுத்திவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தான் அதிகமாக இருக்கும்.
அதனால் தான் பட்டும் படாமல் காதலை வெளிப்படுத்தி அவர் மனதில் இருப்பதை ஆராய கவிதை தான் சிறந்த வழி. கவிதையை கூறிவிட்டு அவர்கள் சிக்னல் க்ரீன் என்றால் ஓகே, அதுவே ரெட் என்றால் கவிதை நன்றாக இருக்கிறதா.? என்று அத்தோடு கூறி தப்பித்து விடுங்கள்.!
கவிதைகள்:
பெண்ணே!!
என்னைக் கண்டதும்,
உன் கண்கள் கொசுவலையா?
மீன் வலையா?
உன்னை கண்டவுடன் என் விழிகளுக்கு தெரிவது வானவில் என நினைத்தேன்!!
என் விழி கண்டதென்ன மாயமா!!
என் மனம் சொல்வதென்ன பொய்யா!!
உந்தன் கண்ணில் உள்ள கரு நிறமா? உந்தன் இதழ் கொண்ட செந்நிறமா? விடை தேடி பறவையாகி வானில் திரிந்தேன்!!
எது என்னை வானவில் என நினைக்க வைத்ததோ தெரியவில்லை!!
உலகம் எல்லாம் வியந்துபார்க்கும் பெண்ணா நீ!!
எந்தன் நெஞ்சை துளைத்து சென்ற வில்லா நீ!!
எனது உயிருக்குள் பூத்த பூவா நீ!!
என் வானமே நீயாகிறாய், என் தேவதை உன் கண்களில் கரு வண்ணமாய் நான் ஆகின்றேன்!!
உன்னுடைய பார்வை மழையாய்த் தூறுதே!!
உன்னுடைய எண்ணம் மரக்கிளையாய் தூவுதே!!
என்னுடைய காதல் உந்தன் காலில் கெஞ்சுதே!
உன் கொஞ்சல் பேச்சு, உன் கள்ள பார்வை, உன் மௌனவார்த்தை யாவும் எந்தன் இரவை எரிக்கிறது!!
விட்டில் பூச்சு போல வெளிச்சம் தேடி வாழ்கிறேன் நானடி!!
உன்னாலே பெண்ணே தூங்கவில்லை!
உன் தொல்லை கூட தாங்கவில்லை!
இந்த இன்பம் வேறு எதிலுமில்லை! என்றாலும்
இன்னும் போதவில்லை!!
என்றெந்தன் நெஞ்சம் அலைபாய்வதேனடி?
உன் நினைவாலே என் இரவுகள் நீண்ட கவிதை ஆகிறது!!
உன் கனவாலே என் தூக்கம் நனவாகிறது!!
மழை தூறூம் போதெல்லாம் உனைக்காண்கிறேன்!
வினா இல்லாமலே விடை தேடி நான் அலைகிறேன்!!
விடை இல்லாமேலே ஒரு வினாவாகிறேன்!!
என் வினாவை நீ திருத்தி எழுதும் வரை…
வார்த்தை வாள் கொண்டு வீசி என் வயதை கொன்று விட்டாய்!
உயிரை ஊசி கொண்டு குத்தி என் இரத்த ஓட்டத்தை ரசித்தாய்!!
கண்ணீறில் மட்டுமே உன்னை காதல் செயதேன்.
உந்தன் கண்களில் மாயம், எந்தன் உயிரிலோ காயம்!!
மண்ணின் மேலே எந்த பெண்ணும் உன்னைப்போல என்று தோன்றவில்லை!!
காதல் வெறும் மோகம் என்றென்னியருந்தேன்.- ஆனால், மேகம் போல் மாறிடக் கண்டேன்.!