தன்னை காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் ஒரே மணமேடையில் திருமணம் செய்து கொண்டுள்ளார் இளைஞர் ஒருவர். இந்தோனேஷியாவை சேர்ந்த இந்த இளைஞரின்“துணிச்சலான முடிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் இந்தோனேஷியா கெட்டபாங் மாவட்டம் ஏர்டாரப் கிராமத்தில் உள்ள பாங்கலன் குக்கிராமத்தில் நடந்து உள்ளது.
இதுகுறித்து மணமகன் கூறியதாவது:-
“இரண்டு பெண்களும் என்னை காதலித்தனர். ஆதலால், நான் இருவரையும் திருமணம் செய்து கொண்டேன். நான் அவர்களின் வரதட்சணைக்கோ அல்லது வேறு எதற்காகவோ ஆசைப்பட்டு திருமணம் செய்யவில்லை. நான் ஒருவரை மட்டும் திருமணம் செய்தால் மற்றவர் மனம் நொந்து விடுவார். என்னால் யார் மனமும் உடைந்து போவதை நான் விரும்பவில்லை, இதனால் ஒரே நேரத்தில் இருவரையும் திருமணம் செய்துவிட்டேன். இதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்த பின்பு தான் இந்த முடிவை எடுத்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இவரது திருமண புகைப்படம் மற்றும் வீடியோ முகநூலில் பயங்கர வைரலாக பரவி வருகிறது.