ஷங்கர் இயக்கிய 2.0 படத்திற்கு சப்டைட்டில் எழுதியதற்கு இன்னும் சம்பளம் தராமல் ஏமாற்றி வருவதாக ரேக்ஸ் என்பவர் ட்விட்டரில் புகார் கூறி சர்ச்சை ஏற்படுத்தியிருந்தார். அவருக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளங்களில் பேசினர்.
இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி லைகா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. “சின்ன படமாக இருந்தாலும் பெரிய படமாக இருந்தாலும் 50 ஆயிரம் ருபாய் தான் சப்டைட்டில் பட்ஜெட் ஒதுக்கப்படும். ரேக்ஸ் இரண்டு லட்ச ருபாய் 2.0 படத்திற்காக கேட்டார். நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அவர் வேலையை செய்து கொடுத்துவிட்டு, சம்பளத்தை பிறகு பேசிக்கொள்ளலாம் என கூறினார்.”
“தற்போதும் அவருக்கு ஒரு லட்சம் ருபாய் தருவதாக கூறினோம். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்கள் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே இப்படி மீடியாவில் புகார் கூறி வருகிறார்” என லைகா தெரிவித்துள்ளது.
— Lyca Productions (@LycaProductions) August 28, 2019