கிளிநொச்சி – பளை வைத்தியர் சிவரூபன் வழங்கிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் – கடற்கரை பகுதியிலிருந்து மேலும் சில வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – கடற்கரை பகுதியிலிருந்து இந்த வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளிலுள்ள சிலரின் உதவியுடன் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை கொலை செய்ய முயற்சித்து வருவதாக வைத்தியர் சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து நடத்தப்பட்ட பல சோதனை நடவடிக்கைகளில் பெருமளவான ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பளை வைத்தியரிடம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, குறித்த வைத்தியர் தெரிவித்து பளை – கரந்தாய் பகுதியிலிருந்து பல வெடி பொருட்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.