லண்டனில் வசிக்கும் மதன் என்னும் நபர் யாழ்ப்பாணம் வந்து காணியை பார்த்து வீட்டைக்காணவில்லை என அதிர்ச்சியடைந்து தற்கொலைக்கு முயன்ற சோக சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் நடந்த சம்பவங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட மதன் என்பவரின் சகோதரன் (தம்பி) தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு அண்ணனிடம் மன்னிப்பு கேட்டதுடன், உங்களுக்கு தெரியாமல் எனது காணியில் கட்டிய வீட்டை உங்கள் பெயருக்கு மாற்றித்தருகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் எனது காணிக்கு பதிலாக வேறொரு காணியை அல்லது காணிக்கான பணத்தை தனக்கு வழங்குமாறும் தெரிவித்திருக்கின்றார்.
தம்பியின் திடீர் மனம் மாற்றத்தினால் மதன் மற்றும் குடும்பத்தினர் தற்போது நின்மதியடைந்துள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
நடந்த சம்பவம் தொடர்பில்..
லண்டனில் வசிக்கும் மதன் என்னும் நபர் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பிரமாண்ட வீடொன்றை கட்ட விரும்பினார்.
அதை யாரிடம் கொடுத்து கட்டுவதென்று தெரியாமல் யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் வசிக்கும் அவரது உடன்பிறந்த சகோதரனிடம் (தம்பி) எனது தந்தையால் எனக்கு கொடுக்கப்பட்ட சாவகச்சேரி பகுதியில் உள்ள காணியில் வீடொன்றை கட்ட விரும்புகிறேன் நீ பொறுப்பாக நின்று கட்டித்தருகிறாயா என கேட்டுள்ளார்.
அப்போது அவரது சகோதரன் (தம்பி) அதற்கென்ன நீங்கள் பணத்தை அனுப்புங்கள் நீங்கள் விரும்பிய வடிவில் வீட்டை பொறுப்பாக நின்று கட்டிதருகின்றேன் என பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து வீடு கட்டுவதற்காக பல லட்ஷம் தொகை பணத்தை பகுதி பகுதியாக தனது சகோதரனுக்கு மதன் அனுப்பியிருக்கிறார், சகோதரனும் பதிலுக்கு வீட்டு வேலை செய்ததற்கான புகைப்படங்களையும் தனது அண்ணனான மதனுக்கு அனுப்பியுள்ளார், முழுவதுமாக சுமார் ஒரு கோடியளவில் அனுப்பிய நிலையில் வீடு கட்டி முடிந்துவிட்டதற்கான புகைப்படங்களும் தம்பியிடமிருந்து வந்துவிட்டது.
ஒருவழியாக எனது சொந்த ஊரில் ஒரு கனவு இல்லத்தை கட்டி முடித்துவிட்டேன் என்ற நிம்மதியுடன் இருந்த மதன் சில மாதங்களுக்கு பிறகு தனது மனைவி குழந்தைகளுடன் யாழுக்கு வர முடிவெடுத்து தம்பிக்கு சொல்கிறார் நான் குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வருகிறேன் எங்களை அழைத்து செல்ல நீ கட்டுநாயக்கா வா என சொல்லி கடந்த 19-ம் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைகிறார் மதன்.
பின்பு தனது தம்பிக்கு போன் எடுக்கிறார் சுமார் 3 மணித்தியாலயங்களாக எந்த பதிலும் கிடைக்கவில்லை, இனி தம்பியை பார்த்துக்கொண்டிருந்து எந்த பயனுமில்லை என்று அவர் ஒரு வாகனத்தை ஹயர் பண்ணி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார், வந்து அவரது மனைவியின் உறவினர் வீட்டில் தங்கியிருந்துகொண்டு மறுநாள் முழுவதும் தம்பிக்கு போன் எடுக்கிறார் எந்த பதிலுமில்லை, தெரிந்தவர்களிடமெல்லாம் விசாரித்தும் இரண்டு நாட்களாக காணவில்லை என்றுதான் பதில் வருகிறது.
என்ன செய்வதென்று தெரியாத மதன், சரி கட்டிய வீட்டையாவது பார்ப்போமென்று எதிர்பார்ப்பில் சாவகச்சேரி சென்று தனது காணியிருந்த இடத்தை நோக்கி போகிறார் அங்கு புதிதாக கட்டியவீடு ஒன்றையும் காணவில்லை, காணியில் பழைய தற்காலிக வீடு மட்டும்தான் இருக்கின்றது, அதிர்ச்சியடைந்து போனார், மனைவி, பிள்ளைகளெல்லாம் வீடு எங்கப்பா என்று கேட்கின்றனர், என்ன நடந்தது? என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றார்.
பின்பு ஒரு வழியாக வாருங்கள் என்று அழைத்துக்கொண்டு திரும்பி செல்கின்றார், தம்பியை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார் எந்த பலனும் கிடைக்கவில்லை ஒரு கட்டிடத்தில் ஆறுகால்மடம் பகுதியில் உள்ள தம்பி வீட்டிற்கு செல்கின்றார், அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது, தான் அனுப்பிய பணத்தில் தான் வடிவமைத்த வீடு அங்கே தம்பிக்கு சொந்தமான காணியில் கட்டப்பட்டிருக்கிறது.
உடனடியாக திரும்பி வந்த இடத்திற்கே சென்று, தம்பி தன்னை ஏமாற்றியதை நினைத்து அழுதுகொண்டு நள்ளிரவில் தற்கொலைக்கு முயற்சி செய்து குடும்பத்தால் காப்பாற்றப்பட்டு விட்டார். தற்போதும் செய்வதறியாது தனக்கு நடந்த நம்பிக்கை துரோகத்தை எண்ணி கண்ணீர் சிந்தினார் மதன்.
இந்நிலையில் தம்பியின் திடீர் மனமாற்றத்தால் சிந்திய கண்ணீருக்கு முடிவு கிடைத்துள்ளது.