வயிற்றில் உள்ள கழிவுகளை சரியாக வெளியேற்றினால் தான் மனிதனின் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்பது மருத்துவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
பலருக்கு மலக்கழிவு வெளியேறுவதில் பிரச்சனை இருக்கும். மனிதனின் முக்கிய உடலுறுப்பான குடலில் படிந்திருக்கும் நச்சுக்கள் தான் இந்த பிரச்சனையை ஏற்படுத்துகின்றன.
சரி, நம் வயிற்று பகுதியில் நம் கையை வைத்து சில சுலபமான விடயங்களை செய்வதின் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.
வயிற்றின் கீழ் பகுதியில் மெதுவாக அழுத்தம் தருவது மூலம் இதை செய்யலாம், இந்த பகுதியை Sea Of Energy என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்த Sea Of Energy என்பது நமது வயிற்றின் தொப்புளுக்கு கீழ் உள்ள இடம் தான். அந்த பகுதியை நமது கையின் மூன்று விரல்களால் மெல்ல அழுத்த வேண்டும்.
அழுத்தி கொண்டே நன்றாக உள்வாங்கி பெருமூச்சு விட வேண்டும்.
இதை செய்து கொண்டே இருக்க , 10 நொடிகளிலிருந்து 3 நிமிடத்துக்குள் உடல் கழிவுகள் நம் குடலிலிருந்து வெளிவருவதற்கான அறிகுறிகள் நன்றாக தெரியும்.
பின்னர் மலக்கழிவானது பிரச்சனையில்லாமல் வெளியேறும்.
வேறு என்ன வழிகள் இதற்கு?
மலக்கழிவு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி உடலின் பின்பக்கம் கீழே படாமல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்தால் அது நல்ல பலன் தரும்.
மலக்கழிவில் பிரச்சனை இருப்பவர்கள் பைபர் சத்து அடங்கிய ஆளிவிதைகள், பீன்ஸ் அவரை, பெர்ரி வகையான பழங்களை சாப்பிடுவது நலம்.