சுவிற்சர்லாந்தின் பாசல் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு 38 வயது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் இரவு நேர பார்ட்டிகள், மற்றும் பணியாளர்களுடன் அவுட்டிங் செல்வது போன்ற காரணங்களினால் கணவர் அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் தனிமையில் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த குறித்த பெண்ணிற்கு கடந்த 2 வருடங்களிற்கு முன்பு முகநூல் ஊடாக இலங்கையின் புத்தளப் பகுதியினைச் சேர்ந்த 24 வயது இளைஞனின் நட்புக் கிட்டியது.
முகநூல் வழியாக ஆரம்பித்த நட்பு வயது வேறுபாடையும் தாண்டி காதலாக வளர ஆரம்பித்தது.
2 வருடங்களின் பின்னர் குறித்த பெண் சமீபத்தில் முகவர் ஊடாக குறித்த இளைஞரை சுவிஸ்ற்கு அழைத்து Living together வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்.
வீட்டில் 17 வயதில் மகளும் மகனும் வாழ்ந்து வந்த நிலையில் குறித்த பெண் வேலைக்குச் செல்லும் சமயம், அவரது காதலரான 24 வயது இளைஞன், வீட்டிலே இருப்பார். பிள்ளைகளை அவருடன் விட்டு விட்டே குறித்த பெண் வேலைக்குச் செல்வார்.
சில வேளைகளில் இரவு பார்ட்டிக்கும் சென்று வருவார். இவ்வாறான குறித்த பெண்ணின் மகளிற்கும் , அந்த இளைஞரிற்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் , பெண்ணின் மகள் கர்ப்பமாகிய சம்பவத்தினை 2 மாதத்தின் பின்னர் கண்டு பிடித்தார் தாய்.
இந் நிலையில் 24 வயது இளைஞருக்கும் , பெண்ணிற்கும் இடையே சண்டை உருவாகி , விடயம் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
இதனையடுத்து பாசல் மாநில பொலிஸார் இந்தச் சம்பவத்தினை விசாரித்து வருகிறார்கள். இச் சம்பவமானது சுவிற்சர்லாந்தில் வாழும் ஈழத் தமிழ்ச் சமூகத்தினர் பலரையும் முகச் சுழிக்க செய்துள்ளது.