Loading...
ஆடிகம பெரியமடுவ பிரதேசத்தில் தந்தையை தாக்கி கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் நபர் ஒருவரை பல்லம பொலிஸார் கைது செய்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
Loading...
மகனிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகனின் திருமண மோதிரம் காணாமல் போயிருந்ததாக தெரியவந்துள்ளது.
அதனையடுத்து தனது திருமண மோதிரத்தை அடகு வைத்து தந்தை மது அருந்திய காரணத்தால் மேற்படி சந்தேக நபரான மகனால் அவரது தந்தை இவ்வாறு தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
Loading...