Loading...
முகவர் ஊடாக பிரான்ஸ் செல்ல சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் சிங்கப்பூரில் கைதாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
யாழிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக சிங்கப்பூர் சென்ற குறித்த இளைஞன், அங்கிருந்து வேறொரு நாடு வழியாக பிரான்ஸ் செல்ல முயற்சித்து, சிங்கப்பூர் விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்திற்குள் சென்ற பின் திடீரென அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
போலியான விசா மூலமாக வேறொரு நாட்டிற்கு செல்ல முயன்ற நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் அறிய முடிகிறது.
Loading...