தென்னிந்திய முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்க்கு அவரது தாயார் சூப்பர் ஸ்டார் விஜய் என குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதியதுடன், அந்த கடிதம் ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் சோபா சந்திரசேகர் ( விஜய்யின் தாய் ) அவர்களின் இந்த கடிதம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், விவாதங்களையும் எழுப்பியிருந்த நிலையில், இது தொடர்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களிடமும் பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது இதற்கு பதிலளித்த சீமான் அவர் சூப்பர் ஸ்டார் என்பதில் என்ன சந்தேகம், அவர்தான் சூப்பர் ஸ்டார் என நான் எப்பவோ சொல்லிவிட்டேன் என கூறியதுடன், இப்போது ரஜினிக்கும் – விஜய்க்கும்தான் திரையுலகில் போட்டி என தெரிவித்துள்ளார்.
தற்போது சீமானின் இந்த பேச்சு தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான முழுமையான காணொளி இதோ..!