சுவிட்சர்லாந்தில் 7 வயது சிறுவனை கொன்றுவிட்டு, பெண்மணி ஒருவர் அவரது உறவினர்களுக்கு கொலை தொடர்பில் குறுந்தகவல் அனுப்பிய விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
பாடசாலையில் இருந்து தனியாக குடியிருப்புக்கு திரும்பிய இலியாஸ் என்ற 7 வயது சிறுவன் 75 வயதான பெண்மணி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டு,
அதில் அந்த சிறுவன் குற்றுயிராக மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். முதற்கட்ட விசாரணையில்,
அந்த பெண்மணி திட்டமிட்டு கொலை செய்யவில்லை எனவும், அப்போது எதிர்பட்ட சிறுவனை அவர் கத்தியால் தாக்கி கொலை செய்ததாக தெரியவந்தது.
ஆனால், தற்போது அந்த பெண்மணி திட்டமிட்டே குறித்த சிறுவனை கொலை செய்யும் அளவுக்கு தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக குறித்த பெண்மணியின் மொபைல் போனில் பதிவாகியிருந்த குறுந்தகவலே முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.
அவரது மொபைலில், சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னரே தமது திட்டத்தை அவர் குறுந்தகவலாக பதிவு செய்துள்ளார்.
அந்த தகவலை அவர் அழித்ததாக கருதி, பின்னர் பலருக்கும் பகிரவும் செய்துள்ளார்.
தம்மை தமது குடியிருப்பில் இருந்து வெளியேற்றியதாகவும், இது தொடர்பில் அதிகாரிகளிடம் முறையிட்டும் எவரும் கண்டுகொள்ளவில்லை எனவும்,
அதனாலையே தமது கோரிக்கையை ஏற்பதற்காக இந்த கொலையை செய்ததாக அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.