இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்துள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் இறுதி டெஸ்ட் போட்டியானது கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ‘ஆல்- அவுட்டானது’. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
மூன்றாவது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் 140 கிலோ வீரர் கார்ன்வெல் (14) நீண்டநேரம் தாக்குபிடிக்கவில்லை. ஹாமில்டனை 5 ரன்களில் இஷாந்த் ஷர்மா வெளியேற்றினார்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ரோச் (17) ஓரளவு கைகொடுக்க 117 ரன்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 299 ரன்கள் பின் தங்கியது.
இந்த போட்டியின் போது கார்ன்வெலை அவுட்டாக்கியதன் மூலம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, டெஸ்ட் அரங்கில் 150 விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார்.