பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில், மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி.
சுற்றி சுற்றி கவின், லோஸ்லியா காதல் ரொமான்ஸ் குறித்தே அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், ஷெரின் செய்த பாராட்டுக்குரிய செயலை யாரும் கவனித்திருக்க மாட்டீர்கள்.
அதாவது, நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் ஷெரீன் ஆண்களுக்கு சாண்டிக்கு முடி வெட்டி விட்டார். பெண்களுக்கு முடி வெட்டி விடுவது ஈசியானது, அதை 2 நிமிடம் பார்த்தாலே மிக நேர்த்தியாக செய்துவிட முடியும்.
ஆண்களுக்கு முடி வெட்டுவது அவ்வளவு ஈசியானது அல்ல. தொழில் கற்றுக்கொண்டு செய்பவர்களால் மட்டுமே செய்ய இயலுகிற விஷயம்.
சாதாரண மக்கள்கூட வீட்டில் முடி வெட்டுவது கிடையாது, ஆனால் பிக் பாஸ் போட்டியாளரான ஷெரின் ஆண் போட்டியாளர்களுக்கு முடிவெட்டி விடுவது பலரையும் வியக்கவே செய்துள்ளது.
இதற்கு முன்பு ஒருமுறை தர்ஷனுக்கு தலை முடி வெட்டி விட்டார். எந்தமாதிரியான தலைக்கணமும் இல்லாமல், அனைவரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர் ஷெரின்.
இவருடைய இத்தகைய செயல்கள் பார்வையாளர்களிடம் நற்பெயரையே ஏற்படுத்தியுள்ளது.