கந்தளாய் நகரில் உள்ள விபசார விடுதிகளை முற்றுகையிட்ட பொலிஸார் அவ்விடுதியில் இருந்த மூன்று இளம் பெண்களையும் விடுதி முகாமையாளரையும் நேற்று(1) கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கொழும்பு,கம்பஹா மற்றும் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 20,25 மற்றும்26 வயதுடைய பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களாவர்.
குறித்த விடுதியில் பெண்களை வைத்து விபசாரத்தொழில் மேற்கொள்ளப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து அந்நிலையம் சுற்றிவளைக்கப்பட்டது.
அங்கு கைதான பெண்களை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்ற சுற்றிவளைப்பின் போதே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்சுற்றி வளைப்பு நடவடிக்கை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரும் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.