வடமராட்சி கிழக்கில் மாமுனை மரமுந்திரிகை பண்ணைக்கு தெற்காக 25 ஏக்கர்காணியில் பேரீச்சை பயிற்செய்கை பண்ண அரசகாணி என்ற கோணத்தில் தனியார் காணியும் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பேர் கடந்த 31 ஆம் திகதி காணிகளை பார்வையிட சென்றபோது மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அதோடு குறித்த பிரதேசத்தில் பேரீச்சை பயிரிடுவதனால் இந்தப்பகுதியில் உள்ள பெருமளவு நாவல் மரங்கள் ( மருத்துவ குணம் நிறைந்த நாவல் பழம்)அழிக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதோடு குறித்த நாவல் மரங்களினால் வருடம்தோறும் பல குடும்பங்கள் நாவல்பழ சீசன் காலத்தில் தமது வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் பல குடும்பங்களின் வருமானத்தை இல்லாமல்செய்து இரண்டு தனிநபர்களுக்கு அவர்களை மேலும் பணமுதலைகள் ஆக்குவது எந்த வகையில் நியாயம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதோடு குறித்த பிரதேசத்தை சாரதவர்களுக்கு எந்த அடிப்படையில் காணி வழங்கப்பட்டது எனவும், அப்படியொருதிட்டம் இருந்தால் முதலில் மருதங்கேணி பிரதேசத்தை சார்ந்தவர்களை கேட்டு.அவர்கள் தங்களுக்கு வேண்டாம் ஏன்றால் மட்டும் மற்றவர்களை பற்றி பிறகு சிந்திக்கலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த காணிகள் வழங்கும் பின்னணியில் நாடளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருக்கும் தொடர்புள்ளதாகவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.