ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இறுதி முடிவெடுக்கும் உயர்மட்ட கூட்டமொன்றை இன்று அலரி மாளிகையில் கூட்டுகிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய அமைச்சர்கள், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை இறுதி செய்யாமல், இழுத்தடித்து வருவதால் கட்சி தொடர்பான அதிருப்தி பொதுமக்களிடம் அதிகரித்து செல்வதாக மூத்த பிரமுகர்கள் வலியுறுத்தியதையடுத்து இன்றைய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி 42 எம்.பிக்கள் கையெழுத்திட்ட கடிதமும் இன்று பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.
எனினும், இன்றும் இறுதியான முடிவெடுக்கப்படும் என உத்தரவாதப்படுத்த முடியாதென ஐ.தே.கவின் பிறிதொரு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.