வேலை பெற்றுத்தருவதாக கூறி இளம் பெண்களிடம் பாலியல் சேட்டை புரிந்து ஐ.தே.கவின் யாழ் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை பொதுமக்கள் கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
சித்தன்கேணியிலுள்ள ஐ.தே.கவின் தொகுதி அலுவலகத்திலேயே பாலியல் சல்லாபம் இடம்பெற்று வந்தது. அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஊடாக வேலை பெற்றுத்தருவதாக கூறி, இளம்பெண்களை அங்கு அழைத்து வந்து பாலியல் இலஞ்சம் கோரி, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் ஐ.தே.கவின் பிரதேசசபை உறுப்பினர்.
வலி மேற்கு பிரதேசசபையின் 9ம் வட்டாரத்தில் வெற்றி பெற்ற உறுப்பினரே இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டார்.
வேலை பெற்றுத்தருவதாக கூறி, பல இளைஞர்களிடம் 2இலட்சம் ரூபா வீதம் பணமும் பெற்றுள்ளார். அதைவிட, இளம் பெண்களை இரவு வேளைகளில் அந்த வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்தார்.
இதை அவதானித்த அந்த பகுதி இளைஞர்கள், நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டை அதிரடியாக சுற்றிவளைத்தனர். இதன்போது, வேலை பெற்றுத்தருவதாக கூறி 19 வயது யுவதியொருவரை அழைத்து வந்து தகாத நடத்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரை கையும் மெய்யுமாக பிடித்த இளைஞர்கள், தர்மஅடி கொடுத்து எச்சரித்து விடுவித்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, குறிப்பிட்ட வீட்டை வாடகைக்கு கொடுத்தவர்கள், உடனடியாக ஐ.தே.க அலுவலகத்தை 3 நாளில் காலி செய்யுமாறு அறிவித்துள்ளனர்.