மக்கள் பயன்படுத்தும் செல்போன்கள் மூலம் ஒருவரின் குணத்தை அறிந்து கொள்ள முடியும் என புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
லிங்கன் பல்கலைக்கழம் மற்றும் லேன்செஸ்டர் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.
இந்த ஆய்வுக்கு ஆயிரக்கணக்கான நபர்கள் மற்றும் அவர்களின் செல்போன்கள் சம்பந்தப்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அந்த நபர்களின் குணநலன்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், ஹென்ட்ரோயிட் செல்போன்களை பயன்படுத்தும் நபர்கள் ஐபோன் செல்போன்களை பயன்படுத்தும் நபர்களை விட நேர்மையானவர்களாகவும் நியாயமானவர்களாகவும் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஹென்ட்ரோயிட் போன்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் வயது கூடியவர்கள் எனவும் அவர்களின் அதிகமானோர் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது.
ஹென்ட்ரோயிட் போன்களை பயன்படுத்துவோர் தமது நலனுக்காக சட்டத்திட்டங்களை மீறுவது குறைவு.
மேலும் இவர்கள் பணத்தை உழைக்க அதன் பின்னால் துரத்தி செல்ல மாட்டார்கள் என ஆய்வை நடத்தியவர்கள் கூறியுள்ளனர்.
ஐபோனை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் இளம் வயதினராக காணப்படுகின்றனர், இவர்கள் களியாட்டங்களை அதிகம் விரும்புகின்றனர்.
பலர் தமது சமூக அந்தஸ்தை உலகத்திற்கு காட்ட முயற்சிப்பவர்கள். இவர்கள் தாம் பயன்படுத்தும் செயலியை அதிகமாக அறியாதவர்கள் இருக்கின்றனர் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஐபோனை அதிகம் பெண்களே பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.