கடந்த மே மாதம் கோட்டாபய ராஜபக்ஷ முறைசாரா விதத்தில் இரட்டை குடியுரிமை இல்லாத இலங்கை கடவுசீட்டை பெறுவது தொடர்பாக விசாரணைக்கு தேவையான ஆவணங்களை விரைவாக வழங்குமாறு CIDயினர் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தனர்.
எனினும் ,இதுவரை அவர்கள் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிகபப்டுகின்றது.
இந்நிலையில் அமெரிக்க குடியுரிமையை நீக்கியதாக கோட்டாபய ராஜபக்ஷவினால் குடிவரவு மற்றும் குடிவரவுத் துறைக்கு அளித்த தவறான அறிக்கைகளுக்கு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சட்டவிரோத செயலை அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிந்தே செய்துள்ளதாக விசாரணைகள் இருந்து தெரிய வந்துள்ளது.
அமைச்சர் வஜிர அபேவர்தன தற்போது கல்லடிபட்ட பூனைபோல ஆதாரங்களை மறைக்கும் நோக்கத்துடன் தொடர்புடைய ஆவணங்களை சிஐடி பெறுவதை அவரே தடுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இதற்கமைய தவறான தகவல்களை வழங்குவதன் மூலம் முறைசாராகடவுசீட்டை பெறுவதற்கு உதவுதல் குற்றச்சாட்டில், அமைச்சர் வஜிர அபேவர்தன மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.