ஒரே நபரை இரண்டு பெண்கள் காதலித்த பிரச்னையில் நிறைமாத கர்ப்பிணியை தாக்கியுள்ளார் ஒரு பெண்.
பிரித்தானியாவின் Peterboroughவில் ஒன்லைனில் உணவுக்கு ஆர்டர் செய்து விட்டு காத்திருந்த Shannon O’Brien, அழைப்பு மணி ஒலிக்க, கதவைத் திறந்துள்ளார்.
வாசலில் நின்ற Siobhan Hood என்ற பெண், கதவைத்திறந்ததும் உள்ளே நுழைந்து Shannonஐ பயங்கரமாக தாக்கியுள்ளார்.
Shannon கீழே விழுந்தும் விடாமல், ஒரு கர்ப்பிணி என்றும் பாராமல் மிருகத்தனமாக தாக்கியுள்ளார் Hood.
தனது உடலில் ஒரு இடம் விடாமல் Hood தாக்க, தன்னை விட்டு விடுமாறு கதறியுள்ளார் Shannon.
நான் தான் உன்னை விடமாட்டேன் என்று சொன்னேனே என்று கூறியவாறு மீண்டும் மீண்டும் Hood தாக்க, தனது வயிற்றில் அடிபட்டுவிடாமல் இருக்க படாத பாடு பட்டிருக்கிறார் Shannon.
சரி, எதற்காக இந்த மனிதத்தன்மையற்ற தாக்குதல்? எல்லாம் பாழாய்ப்போன ஒரு காதலுக்காகத்தான்… Shannon ஒருவரை காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்.
காதலிக்கத் தொடங்கி மூன்று மாதங்கள் ஆன நிலையில், தனது காதலன், Hood என்ற பெண்ணை ஏற்கனவே காதலிப்பதை அறிந்ததோடு, அவர் நீண்ட காலமாகவே அவரைக் காதலிப்பதை அறிந்து, தன்னை அந்த நபர் ஏமாற்றியிருக்கிறர் என்பதை உணர்ந்து, அவரை விட்டு விலகியிருக்கிறார் Shannon.
ஆனால், Hood விடவில்லை, நீ எப்படி என்னுடைய காதலனுடன் பழகலாம் என்று தினமும் போனில் தொந்தரவு செய்திருக்கிறார்.
தொல்லை தாங்காமல் Shannon போன் எண்ணை மாற்றிவிட்டார். அப்படியும் அவரது முகவரியை அறிந்துகொண்டு, வீடு தேடி வந்து Shannonஐ தாக்கியிருக்கிறார் Hood.
குழந்தைக்கு பாலூட்டக்கூட முடியாதவாறு, மார்பகங்கள் இரத்தம் கட்டிப்போகும் அளவுக்கு அடித்து உதைத்திருக்கிறார் Hood.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Shannonக்கு தலை முதல் கால் வரை ஒரு இடம் விடாமல் கீறல்கள் இருந்த நிலையில், அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.
அதிர்ஷ்டவசமாக அவரது குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. Alfie என்ற அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் Shannon.
கைது செய்யப்பட்ட Hoodக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு 200 மணி நேரம் ஊதியம் இல்லாமல் வேலை செய்ய அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.