வாஷிங்டனில் அண்மையில் சமீபத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாடு ஒன்றில் உரையாற்றிய பென்டகன் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகத்தின் விண்வெளி தொடர்பான உப செயலாளர் வின்ஸ்டன் பியவுசெப் கூறியதாவது:-
அமெரிக்க மக்களை பூமிக்கு வெளியில் கொண்டு செல்ல அமெரிக்க திட்டமிட்டு வருகிறது. உலகில் தற்போது காணப்படும் நிலைமைகளில் பூமியை கைவிட்டு வேறு குடியிருப்பை தேர்வு செய்ய அமெரிக்க தயாராகி வருகிறது.
உலகில் தற்போது காணப்படும் ஸ்திரமற்ற நிலை மற்றும் ஒழுக்கமற்ற அரசியல் முறை தொடர்பில் அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.
கோள்களை கணக்கிடுவதில் பல தவறுகள் நடந்துள்ளது.
பூமியில் தற்போது காணப்படும் நிலைமையில் எந்த நாடாவது அமெரிக்காவின் செயற்கை கோளை தாக்கி அழித்தால், அமெரிக்கா செயலிழந்து பெரிய அழிவு ஏற்படும்.
இவ்வாறான சூழ்நிலையில், அமெரிக்கர்களை வேறு பாதுகாப்பான இடத்தை நோக்கி கொண்டு செல்லும் கடும் தேவையை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என கூறியுள்ளார்.