சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், 2.1 கி.மீ., தூரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் 400 மீட்டரில் தான் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
நிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ., தூரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டதாகவும், விக்ரம் லேண்டரிடம் தொடர்பை பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக விஞ்ஞானிகள் கூறினர்.
இந்நிலையில், நிலவின் மேற்பரப்பிற்கு 400 மீட்டர் தொலைவில் தான் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலவை நெருங்கும் விக்ரம் லேண்டர் குறித்த கிராப் புகைப்படத்தின் மூலம் இந்த குழப்பம் தெளிவாகியுள்ளது.
அதனை விளக்கும் விதமாக மேலுள்ள புகைப்படத்தில் நடுவில் உள்ள சிவப்பு மஞ்சள் கோடுகள் விக்ரம் லேண்டரின் நிலையை காட்டுகிறது. அதில் சிவப்பு கோடு, திட்டமிடப்பட்ட இலக்காகவும், பச்சை கோடு, விக்ரம் லேண்டரின் நிலையையும் தெளிவுப்படுத்தியது.
இரண்டு கோடுகளை ஆய்வு செய்ததில் சிவப்பு கோட்டின் மிக அருகில் தான் பச்சை கோட்டின் நிலை மாறி இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதாவது திட்டமிடப்பட்ட பாதையில் இருந்து கிட்டத்தட்ட 400மீ., தொலைவில் தான் தொடர்பு துண்டிக்கப்பட்டு பாதை மாறியதாக தெரிய வந்துள்ளது.