Loading...
தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமான கொழும்பு தாமரை கோபுரம் இம்மாதம் 16ம் திகதி மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.
இந்த தாமரை கோபுர நிர்மாணிப்புக்காக 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில் அதில் 80 சதவீதமான பகுதி சீனாவின் எக்சிம் வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது.
Loading...
குறித்த கோபுரத்தில் தொலைத்தொடர்பு அருங்காட்சியகம், ஹோட்டல், உணவகம், கேட்போர்கூடம், மாநாட்டு மண்டபம் என்பன அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தாமரை கோபுர திறப்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது
Loading...