வட்டவலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வட்டவலை பிட்டவீன் விக்கடன் தோட்டத்தில் இறந்த தாயின் சடலத்தை முச்சக்கர வண்டியில் ஏற்றிசென்ற மகன் மற்றும் பேரபிள்ளை தொடர்பிலான விசாரனைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 09 ஆம் திகதி விக்கடன் தோட்டத்தில் சுகயினம் காரணமாக 70 வயதுடைய ராகை என்ற தாயின் சடலம் கானாமல் போயுள்ளமை தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை வட்டவலை பொலிஸ் நிலையத்தில் விக்டன் தோட்டமக்கள் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கு அமைய விசாரனைகளை மேற்கொண்ட வட்டவலை பொலிஸார் தெரிவிக்கையில், குறித்த தோட்டபகுதியில் வசித்த ஏழுபது வயதான ராகை என்ற தாயை சுகயினம் காரனமாக வீட்டில் இருந்த நிலையில் மகனின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வந்நதாகவும் இரண்டு வருடங்களின் பின் வீடு திரும்பிய தாக தெரிவிக்கபடுகிறது.
தாய் சுகயினம் காரனமாக 09ம் திகதி உயிரிழந்த நிலையில் எனது மகனும் கணவரும் இனைந்து சடலத்தை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றதாகவும் இதுவரையிலும் சடலத்தை எங்கு கொண்டு சென்று என்ன செய்தார்கள் என்பது தொடர்பில் இது வரை எனக்கு தெரியாது என இவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என குறித்த தாயின் மகனின் மனைவியால் வட்டவலை பொலிஸாருக்கு வழங்கபட்ட வாக்குமுலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தாயை அவரது மகன் கொலைசெய்து கொண்டு சென்றிருக்கலாம் என தோட்டமக்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சடலத்தையும் மகன் மற்றும் பேரபிள்ளையை பொலிஸார் பொதுமக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.