பிக்பாஸ் 3 நிகழ்ச்சி பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் சமீப நாட்களாக சென்றுகொண்டுள்ளது. இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்களின் வருகையால் அழுகை, மகிழ்ச்சி போன்றவைகளினால் நிறைந்ததாக பிக்பாஸுள்ளது.
அந்தவகையில் இலங்கைப்பெண்ணான லொஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தந்தையை கண்ட லொஸ்லியா பயங்கரமாக அழுது துடித்தார்.
எனினும் வரும் பொழுதே மிகவும் இறுக்கமான முகத்துடன் தான் லொஸ்லியாவின் தந்தை வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதோடு , லொஸ்லியாவின் தங்கையும் அவருடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில் மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
இதில் கடுமையாக லொஸ்லியாவை அவர் தந்தை திட்டியுள்ளார். இதற்காகவா உன்னை அனுப்பினோம்… இப்படியா உன்னை வளர்த்தோம் … எல்லாரும் காறி துப்புறாங்க…. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுட்டு உள்ளே வா என் கோபமாக கூறியுள்ளார்.
அவரின் இந்த செயலானது ஒரு சராசரி ஈழத்தமிழ் தந்தையின் கோபமாக வெளிப்பாடாக உள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கது.
இந்நிலையில் தந்தையுடன் சென்ற லோஸ்லியாவின் தங்கை, அப்பாவை சமாதானப்படுத்துவதா அல்லது அக்காவிற்காக நிற்பதா எனதெரியாமல் தடுமாறி நிற்கின்றமை பார்ப்போரை கண்கலங்க வைக்கின்றது.
சேரன் அவரை சமாதானபடுத்தியபோதும் தான் தலைகுனிந்து வாழ கூடாது என அவர் தனது ஆதாங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.
இதேவேளை கடந்த பிக்பாஸ் போட்டியாளர்களான யாஷிக்கா , ஐஸ்வர்யா அதிகமாக பேசப்பட்டவர்கள். அவர்களின் உறவினர்கள் யாரும் அவர்களை கண்டிக்கவில்லை.
இந்நிலையில் லொஸ்லியா அப்பாவின் கோபம் நியாயமானது என்பதோடு எமதுபண்பாட்டினையும் அவரது உணர்வுகள் எடுத்துகாட்டி நிற்பதாக பலரும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.