முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகையீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சுவாசஉதவி உபகரணம் பொருத்தப்பட்டு, அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி மற்றும் புகைப்படம் போலியானது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பாக நாங்கள் விசாரித்தபோது” அவர் வழமை போல் நலமாக உள்ளத்துடன், அரசியல் செயற்பாடுகளையும் மற்றும் நாமல் ராஜபக்ஷவின் திருமணம் குறித்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக” மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராமவில் உள்ள வீட்டின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஹரகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுஜன பெரமுன கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதன் அடிப்படையில் இந்த செய்தி உருவாக்கப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.