நமது வாயை தினமும் சுத்தம் செய்யவில்லையெனில், நாம் தினமும் சாப்பிடும் உணவுகள் அனைத்தும், அது நமது வாயில் கிருமிகளாக தங்கிவிடும்.
எனவே நாம் தினமும் காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளைகளும் பற்களை துலக்கி, உணவை சாப்பிட்டு முடித்தவுடன் வாயை கொப்பளிக்கவும் வேண்டும்.
மேலும் வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை அழிக்க ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு வாயைப் பராமரிக்க வேண்டும்.
இயற்கைப் பொருட்கள் கொண்டு வாயைப் பராமரித்தால், வாயில் ஏற்படும் பல் கூச்சம், மஞ்சள் நிற பற்கள், வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தக்கசிவு, பல் சொத்தை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும்.
பல் கூச்சம்
நம்முடைய வாயில் pH அளவு குறைவதன் காரணமாக பற்களின் எனாமல் தேய்ந்து, பல் திசுக்கள் வெளிப்படுகிறது. இதனால் தான் பல் கூச்சம் ஏற்படுகிறது.
எனவே இது மாதிரியான பல் கூச்சத்திற்கு, ஒரு டம்ளர் நீரில், 1 சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு 2 வாரத்திற்கு ஒருமுறை வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
ஈறுகளில் ரத்த கசிவு
மஞ்சள் பற்கள், ஈறுகளில் ரத்தக்கசிவு போன்ற பல பிரச்சனைகள் இருந்தால், தினமும் காலையில் பற்களைத் துலக்கும் முன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 4-5 நிமிடம் கொப்பளித்து துப்ப வேண்டும்.
இம்முறையை பின்பற்றினால் பற்கள் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
பற்களின் ஈறு வலிகள்
வேப்பிலையில் ஆன்டி-மைக்ரோபியல், பூஞ்சை எதிர்ப்புப் பொருள் போன்றவை ஏராளமாக உள்ளது. இதனால் வேப்பங்குச்சிகள் பற்கள் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.
எனவே தினமும் வேப்பங்க் குச்சிகளைக் கொண்டு பற்களைத் துலக்கி, வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரால் தினமும் மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வர வேண்டும்.
வாய் துர்நாற்றம்
படிகாரமானது, நமது வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் டாக்ஸின்கள் மற்றும் அமிலங்களைத் தடுக்கும் தன்மைக் கொண்டது.
எனவே ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, அதில் 1/4 டீஸ்பூன் படிகாரத்தை சேர்த்து வடிகட்டி, அதைக் கொண்டு வாயைக் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கிவிடும்.
வாய் புண்
ஒரு கப் நீரில் சிறிது வெந்தயக் கீரையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு, அந்நீரால் வாயை தினமும் கொப்பளித்து வந்தால், வெந்தயக்கீரையில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை, வாய்ப் புண்ணை சரிசெய்வதோடு, நம்முடைய வாய் துர்நாற்றத்தையும் தடுக்கிறது.
தொண்டைப் புண்
ஒரு டம்ளர் சூடான நீரில் 2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, தினமும் காலையில் வாயைக் கொப்பளித்து வர வேண்டும். இதனால் வாய் மற்றும் தொண்டையில் உள்ள கிருமிகளை அழித்து, அவற்றை வெளியேற்றி, தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.