Loading...
உலகம் முழுவதும் 20 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தைராய்டு சுரப்பியால் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இந்த தைராய்டு பிரச்சினை இரண்டு வகைப்படும். ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என்று அழைக்கப்படுகிறது.
Loading...
இதில் ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்து விடும்.
இதற்கு காரணம் போதுமான தைராய்டு சுரப்பி சுரக்கப்படாதது தான் காரணம். எனவே ஹைப்போ தைராய்டிசம் கொண்ட நபர்கள் உடல் எடையை குறைக்க சில இயற்கை வழிகளை பின்பற்றி வரலாம்.
- இந்த முறைகள் உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவியாக இருக்கும்.
- மருத்துவரை அணுகி தைராய்டு செயல்பாடு சீராக இருக்க சிகச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.
- மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
- சரியான அளவில் நேர நேரத்துக்கு மருந்துகளை சாப்பிட்டு வந்தாலே போதும் தைராய்டு ஹார்மோன் சுரப்பு கட்டுக்குள் வந்து விடும்.
- உடம்பில் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் முக்கியம். இதுவும் உங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் பயன்படுகிறது.
- தண்ணீர் உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. பசியை குறைத்து சீரண சக்தியை அதிகரிக்கிறது.
- உணவுப் பழக்கம் மட்டும் உங்கள் உடல் எடையை குறைக்காது. அதனுடன் சேர்த்து உடற்பயிற்சியும் செய்யும் போது உடல் எடை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
- உணவை பிரித்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள். 3 வேளையாக சாப்பிடாமல் 5 வேளையாக சாப்பிடுங்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை எடுப்பதும் அவசியம். அதிகமாக இனிப்பை எடுக்காதீர்கள்.
Loading...