பிக் பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பு கூடியிருக்கிறது. யார் முந்தப்போகிறார்? யார் வெளியேறப்போகிறார்கள் என்ற பதற்றம் பார்வையாளர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது.
இந்நிலையில், பிக் பாஸ் விட்டுக்கு Freeze Task-ல் அவர்களின் உறவினர்கள் அழைத்து வரப்பட்டு போட்டியாளருக்கு சர்ப்ரைஷ் கொடுக்கப்படுகின்றது.
நேற்று லொஸ்லியாவின் குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டிருந்தனர். இன்று தர்ஷனின் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தர்ஷனின் அம்மா மற்றும் தங்கை வருகை தந்திருந்தனர். தர்ஷனின் தங்கையை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகிய தங்கையா என்று வாயடைத்து போய்விட்டனர். அவரின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதேவேளை, தர்ஷனிடம் ஒரே வார்த்தையில் மனதில் நினைப்பதை செய். யாருக்காகவும் நீ விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று அவரின் அன்பு தங்கை அறிவுரை வழங்கி விட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
மேலும், நிச்சயம் இலங்கை தர்ஷன் வெற்றி பெறுவார் என்று அவர் குடும்பம் மாத்திரம் இல்லை, முழு நாடும் எதிர்பார்த்து காத்திருக்கின்றது