பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் கவினுக்கு நிகழ்ந்த துயரம் கடந்த 78 நாட்களில் நடக்காத ஒன்றினை அனுபவித்து வந்துள்ளார்.
வெளியில் தாய் மற்றும் குடும்பம் சிறையில் காணப்படுகின்றனர். உள்ளே லொஸ்லியாவுடனான காதலால் சற்று மகிழ்ச்சியாய் காணப்பட்டார் கவின்.
இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் லொஸ்லியாவின் தந்தை. இதனால் காதல்தோல்வியில் கவின் அழுதது ரசிகர்கள் கண்களே கலங்க வைத்துள்ளது.
ஒருபுறம் இந்தியஅளவில் மிகவும் ட்ராண்டாகி வந்துகொண்டிருக்கின்றார். தற்போது கவின் வெளியேறுகின்றார் என்ற தகவல் வந்துகொண்டிருக்கும் நிலையில் கவினைப் பார்ப்பதற்கு உள்ளே யார் செல்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கவின், ஷெரின், சாண்டி இவர்களின் பெற்றோர்கள் தான் இன்னும் உள்ளே செல்லாமல் இருக்கின்றனர். இதில் கவினின் அம்மா ஏற்கெனவே மோசடி வழக்கில் சிக்கி கைதாகி இருப்பதால் அவரைக் காண அவரது அக்கா மற்றும் தந்தை செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி கவினின் நண்பர்களும் இன்று உள்ளே சென்றுள்ளார்களாம்.