ரிஜிஸ்டர் ஆபிசில் இரு. திருமணம் செய்து கொள்ளலாம் என வாக்குறுதி அளித்த காதலன், பல மணி நேரம் ஆகியும் வரவில்லை. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காத்திருந்தும் வரவில்லை. பெரியம்மா கூட வருகிறேன்.. என பல மணி நேரம் தண்ணி காட்டியவர் மொபைல் போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
பின்னர் அந்த பெண் எடுத்த முடிவு தான் அதிரடியின் உச்சம். நேராக காவல்நிலையம் போனார், எனது பெயர் ராஜகுமாரி, ஊர் வேலூர் அடுத்த கீழ் வல்லம். வயது 23, நானும் சுரேசும் 2 வருடமாக காதலித்து வருகிறோம். திருமணம் செய்ய முடிவு செய்தோம். குடும்பத்தினரிடம் சொன்னோம்.
இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் இடையில் அவன் திருமணத்தை தாமதப்படுத்தினான். எனது வீட்டில் சாதி பார்க்கிறார்கள் என்று சொன்னான். ஒரு வழியாக இன்று குடும்பத்துடன் சார்பதிவாளர் அலுவலகம் வருகிறேன். நீயும் குடும்பத்துடன் வா என்றார். நான் வந்துவிட்டேன்.
அவன் வரவில்லை என்றார். கண்ணீர் கதையை கேட்ட காவலர்கள் வண்டியை எடுத்தனர். அவனது வீட்டுக் கதவை தட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு கூட்டி வந்து மேளம் கொட்டி திருமணத்தை நடத்தி வைத்தனர். ராஜா, ராணி நயன்தாராவை போல் சில மணி நேரங்கள் வேதனையை அனுபவித்த அந்த பெண்ணிற்கு முடிவு நயன்தாராவைப் போல் அமையவில்லை. மகிழ்ச்சியாக முடிந்தது திருமணம்.