பெரும்பாலான ஏ.டி.எம் மெஷின்களில் திரைக்கு மேல் ஒரு வட்ட வடிவிலான கண்ணாடி ஒன்று இடம் பெற்றிருக்கும்.
அதை பலரும் ரகசிய கேமரா என்றும், அதன் மூலம் யார் பணம் எடுக்க வருகிறார்கள், திருடர்கள் வந்தால் அவர்களை கண்டுபிடிக்க தான் அதை பொருத்தியிருப்பதாக கருதுவார்கள்.
ஆனால், உண்மை அதுவல்ல. அந்த கண்ணாடி பணம் எடுப்பவரின் உதவிக்காக அமைக்கப்பட்ட ஒன்றாகும். அது அகலமாக பின்னாடி இருப்பதை உங்களுக்கு காட்டும் வகையில் இருக்கும்.
இதன் மூலம், நீங்கள் ரகசிய குறியீடு எண் பதிவு செய்யும் போது யாராவது உங்களை பின்னாடி இருந்து வேவு பார்க்கிறார்களா, திருடர்கள் உள்ளே வருகிறார்களா? போன்றவற்றை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.
இது தவிர ஏ.டி.எம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இனிக் காணலாம்…
ஏ.டி.எம் என்றால் என்ன? ஏ.டி.எம் என்பது தானியங்கி பணம் எடுக்கும் மெஷின்.
உலகம் முழுவதும் ஏறத்தாழ மூன்று மில்லியன் ஏ.டி.எம் மெஷின்கள் உள்ளன. இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.
முதல் ஏ.டி.எம் மெஷின்? வியப்பாக தான் இருக்கும் ஆனால், இது தான் உண்மை. உலகின் முதல் ஏ.டி.எம் மெஷின் லண்டனில் உள்ள என்பீல்ட் டவுன் எனும் பகுதியில் 1967-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
நான்கு இலக்க ரகசிய எண்? ஏ.டி.எம் மெஷினை கண்டுபிடித்த நபருக்கு “Dyscalculia” எனப்படும் கணிதக்குறைபாடு இருந்தது. அதனால் தான் அவர் நான்கு இழக்க ரகசிய முறையை உட்படுத்தினார்.
பிரேசிலில் நான்கு இலக்க ரகசிய எண் முறை இல்லை. அதற்கு பதிலாக, அந்நபரின் கைரேகை தான் ரகசிய குறியீடாக எடுத்துக்கொள்ள படுகிறது.
இந்தியாவின் முதல் ஏ.டி.எம்? இந்தியாவின் முதல் ஏ.டி.எம் மெஷின் 1986-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது மும்பையின் ஒரு வங்கியில் அமைக்கப்பட்டது.
திருடு போனால்? ஒருவேளை ஏ.டி.எம் திருடு போனால் என்னவாகும்? என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது.
எல்லா ஏ.டி.எம் மெசின்களும் ஜி.பி.எஸ் சிஸ்டம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒரு வங்கியின் ஏ.டி.எம் மெஷினை திருடினால், அது அந்த வங்கிக்கு தகவல் அனுப்பிவிடும்.
ஏ.டி.எம் களில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காணொளிப்பதிவு. ஏ.டி.எம் திரைக்கு மேல் அமைந்திருக்கும் கண்ணாடி இது போன்ற சம்பவங்களில் இருந்து தப்பிக்க உதவும்.