எகிப்து நாட்டில் தற்காப்புக்காக கொலை செய்துவிட்டு சிக்கிய 15 வயது சிறுமியை விடுவிக்க வலியுறுத்தி அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் கடந்த ஜூலை மாதம் 15 வயது சிறுமியின் ஒப்புதல் வக்குமூலம் பரபரப்பாக பேசப்பட்டது.
அதில், தம்மை பேருந்து ஒன்றில் கடத்தி சென்ற சாரதி ஒருவர் கத்தி முனையில் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றதாகவும்,
அவரது கத்தியாலையே குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமி மீது கொலை வழக்குப் பதிந்த பொலிசார், அவரை கன்னித்தன்மை சோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தலைநகர் கெய்ரோவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம், பேருந்து பயணத்திற்கு முன்னர் தமது காதலருடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவே அவரை கன்னித்தன்மை சோதனைக்கு உட்படுத்த காரணமாக அமைந்துள்ளது. மட்டுமின்றி, அவரது காதலரையும் நண்பரையும் இந்த வழக்கு தொடர்பில் கைது செய்துள்ள பொலிசார்,
இந்த வழக்கில் அவர்களின் பங்கு தொடர்பிலும் விசாரித்து வருகின்றனர். தற்போது அவரை மேலும் 30 நாட்கள் விசாரணை கைதியாக வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.