பிரான்சில் இந்த ஆண்டு நிலவிய கடும் வெப்பம் காரணமாக தேன் உற்பத்தி பெருமளவு பாதிப்புக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்சில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக 1,500 பேர் மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் அமைச்சரே வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இக்கடும் வெப்பம் பல்வேறு தொழில்களையும் பாதித்துள்ளது என தெரியவந்துள்ளது. Hérault மற்றும் Gard நகரில் 46°c வெப்பம் நிலவியிருந்தது.
இந்நிலையில் அங்கு 80 வரையான பெரிய தேன் கூடுகள் மொத்தமாக சேதமடைந்ததாகவும், ஒவ்வொரு தேன் கூட்டிலும் 40,000 முதல் 60,000 வரை தேனீக்கள் இருந்ததாகவும் அவை அனைத்தும் அழிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பொதுவாக 34°c முதல் 36°c வரையான வெப்பம் மட்டுமே தாங்கக்கூடிய தேனீக்கள் இந்த அளவான (46°c) வெப்பத்தை தாங்குவது சாத்தியமே இல்லாதது என தேனீ வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இம்முறை பிரான்சில் தேன் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தட்டுப்பாடு நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.