Loading...
காயத்தில் இருந்து மீண்டுள்ள மெஸ்ஸி இன்றைய சம்பியன் லீக் போட்டியில் பார்சிலோனா அணிக்காகக் களமிறங்குவார் எனத் தெரிகிறது.
கோபா அமெரிக்க கிண்ணத்துக்கான போட்டியில் ஆர்ஜென்ரீனா அணிக்காக மெஸ்ஸி விளையாடினார். இதன்போது அவர் காயமடைந்தார். இதனால் மருத்துவ ஓய்வில் இருந்த மெஸ்ஸி பார்சிலோனாவுக்காக முதல் 4 போட்டிகளில் களமிறங்கவில்லை.
Loading...
சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த மெஸ்ஸி நேற்றையதினம் பயிற்சியில் ஈடுபட்டார்.
இதேவேளை, மெஸ்ஸி இல்லாததால் 4 போட்டிகளில் 2 போட்டிகளிலேயே பார்சிலோனா வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...